மாவீரன் பூலித்தேவன்
முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.
மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.
””””கள்ளர்”””” என்ற சொல் பொதுவாக ””””களவுத்தொழில் புரிபவர்”””” என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை ””””எனி இந்தியன் பதிப்பகம்”””” வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள ””””கள்ளர் சரித்திரம்”””” என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் ””””கார்காத்த வேளாளர்கள்”””” காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, “கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்”””””””” என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
கள்ளர் சரித்திரம்
ஆறாம் அதிகாரம்
நன்மக்கள், தற்கால நிமை, சீர்திருத்தம்
கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும், இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும் , வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர்கள் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர்.
கள்ளர் சரித்திரம்
ஐந்தாம் அதிகாரம்
நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல்
தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுதும்.
வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லலையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும்.
கள்ளர் சரித்திரம்
நான்காம் அதிகாரம்
புதுக்கோட்டை மன்னர்கள்
தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை.
‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு – மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு – கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு – செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன்’
என்பது விளக்கும். புதுக்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்த மன்னர்களின் வரலாறு சுருக்கமாக இங்கே கூறப்படும். ஸ்ரீரங்கராயலு என்னும் விஜய நகர அரசனது மதம் கொண்ட யானயை அடக்கிப் பல விருதுகள் பெற்ற ஆவடை ரகுநாத தொண்டைமானைப் பற்றி பின்னர் கூறுகிறேன். — தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்.
கள்ளர் சரித்திரம்
மூன்றாம் அதிகாரம்
அரையர்களின் முற்கால நிலைமை
கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் இவர்களின் அப்பொழுதைய நிலைமையை இங்கு வேறாக எடுத்துக் கூறவேண்டுவதின்று. இன்னவரின் ஆட்சி நிலை குலையத் தலைப்பட்டதன் பின்பு இருந்துவந்த நிலைமையே இங்கே ஆராய்தற் பாலது. இவ்வாராய்ச்சிக்கு இவர்களுக்குள் வழங்கும் கிளைப் பெயர்கள் பெரிதும் உதவி புரிவனவாகவுள்ளன. பழைய தமிழ்ச் சங்க நாளிலே இப்பொழுது வழங்குவன போன்ற பல பட்டப் பெயர்கள் மக்களுக்கு வழங்கவில்லையென முன்பே கூறியள்ளாம். இப்பெயர்களின் தோற்றங்களை ஆராயுமிடத்தே இவையெல்லாம் அவரவர் இருந்த நாடு பற்றியும். பிறநாடுகளை வென்று கைக் கொண்டமை பற்றியும், படைத்தவைராகவோ, படைவீரராகவோ இருந்தமை பற்றியும், நாடாட்சி முதலியன பற்றியும் இடைக் காலத்தே உண்டாயின என்பது விளக்கமாம்..