காங்கிரசை காத்தான்

April 30 2010one Commented

Categorized Under: பசும்பொன் தேவர், வரலாறு

அரசியல் சாணக்கியர் என்று பெயர்பெற்ற மூதறிஞர் ராஜாஜிகூட தேவரை…

“இந்திய சுதந்திர யுத்தத்தின் தென்புலத்திற்கு என்னைப் பார்த்தன் என்று புகழ்கிறார்கள். அந்த புகழுரையை நான் ஏற்பதாக இருந்தால் முத்துராமலிங்கத்தேவர் தான் என்னுடைய சாரதி…”

என்று அகமகிழ்ந்து கூறினார். 1937_ம் வருடம் பொதுத்தேர்தலின்போதுதான், முதன்முதலாக முத்துராமலிங்கத்தேவர் அரசியலுக்குள் நுழைந்தார். அப்பொழுது தேவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவர் அன்று அரசியல் களத்தில் கால் வைக்காமல் இருந்திருந்தால் தென்புலத்தில் காங்கிரஸ் அடியெடுத்துவைத்திருக்க முடியாமல் போயிருக்கும். நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பூலாங்குறிச்சி வெள்ளியப்ப செட்டியார் என்பவருக்கு மக்கள் வாக்களிக்குமாறு பல பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த வேட்பாளருக்கு செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும் மற்றும் சில செல்வந்தர்களும் பெரிய அளவில் உதவினார்கள். பணப் பலத்தோடு நடைபெறுகிற அந்த பிரசாரத்தை எதிர்த்து பசும்பொன் தேவர் கானோடுகாத்தானில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்து பேசினார். பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் தேவரும் மற்றும் அவரது நண்பர்களான மானாமதுரை தேசபக்தர் கே.என்.எஸ்.நாராயண அய்யரும் வேறு சில பேச்சாளர்களும் அமர்ந்திருந்தார்கள். வீரத்துடன் தேவர் பேசிக்கொண்டு இருந்தபொழுது அழுகிய முட்டைகளும் தக்காளிப் பழங்களும் எங்கிருந்தோ மேடை நோக்கி வந்து விழுந்தன.அதோடு ஒரு கல் பசும்பொன் தேவரின் தலையைக் குறி பார்த்து வீசப்பட்டபொழுது சட்டென்று அங்கிருந்த நாராயண அய்யர் குறுக்கே தன் தலையை நீட்டி கல் தேவரின் மீது தாக்கப்படாமல் தடுத்தார். அதனால் அவருடைய தலையில் கல் மோதி இரத்தம் பீறிட்டது. மக்கள் ஆரவாரத்துடன் கொந்தளித்து எழுந்தார்கள். அவர்களை அமைதியாக இருக்குமாறு தேவர் சமாதானப்படுத்திக்கொண்டே தன் கதர் வேட்டியைக் கிழித்து இரத்தம் பெருகி வந்த நாராயண ஐயரின் தலையைச் சுற்றிக் கட்டினார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். வீசப்பட்ட கல்லை தேவர் தன் கையில் எடுத்துக்கொண்டு, “வெற்றி நமது காங்கிரஸ் வேட்பாளருக்கு என்பதற்கு இந்தக் கல்லே சாட்சி. என் சொல்லுக்கு மதிப்புக் கொடுங்கள்!” என்று மேடையில் கர்ஜித்தார்.

செத்த பிணத்தைக்கூட உயிர் பெற்று எழச்செய்யும் வீரமிகுந்த இவரது பேச்சாற்றலுக்கஞ்சிய வெள்ளை அரசாங்கம் சிலகாலம் வரை இவர் மேடையில் பேசக்கூடாதென்று வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. தமிழ்நாட்டில் இரண்டு பேர்தான் இத்தகைய வாய்ப்பூட்டுச் சட்டத்தைச் சந்தித்தவர்கள். ஒருவர் தேவர், மற்றொருவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. வட இந்தியாவைப் பொறுத்தவரை திலகர்.தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்து விட்டுத் தொகுதிக்குப் போய் பிரசாரம் செய்யாமல் வெற்றி பெற்ற தலைவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் இதுவரை இரண்டு பேர்தான். ஒருவர் முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப். மற்றொருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

தமிழ்நாட்டின் ஒரு காலத்தில் நீதிக்கட்சி செல் வாக்கு மிக்க கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருந்த காரணத்தால் காங்கிரஸ் வேரூன்ற முடியாத நிலை இருந்தது. அதுவும் தென் மாவட்டங்களில் அடித்தளமே பலமில்லாமலிருந்தது. தேவர் அவர் களின் மக்கள் செல்வாக்கையும் ஆற்றல் மிகுந்த பேச்சாற்றலையும் உணர்ந்த சர்தார் வல்லபாய் படேல் தேவரின் துணையால் எப்படியாவது காங்கிரசை நிலைநிறுத்த எண்ணி தேவரிடம் பலரைத் தூதனுப்பினார். ராஜாஜி வாயிலாகவும் கேட்டுக் கொண்டார்.

1936 தேர்தலில் விருதுநகர் நகரசபைத் தேர்தலில்  முதன் முதல் காமராசர் நிற்பதற்குக் காரணமானவரும் தேவர் தான். அக்காலத்தில் சொத்துவரி கட்டுபவர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்கமுடியும் என்ற நிலையிருந்தது. காமராசர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. ஏனென்றால் அவர் சொத்து வரி கட்டிய தில்லை. ஆகவே காமராசர் பெயரில் தேவரே நான்கு வெள்ளாட்டை வாங்கி நகராட்சியில் பதிவு செய்து ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரி கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் காட்டி விட்டு காமராஜரை வாக்காளராக்கி தேர்தலில் நிற்க வைத்து விருதுநகர் நகரசபைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெறச் செய்தார்.

இதை குறிப்பிடுவதன் நோக்கம் காமராஜரை குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காக இல்லை. உண்மையான வரலாறு உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக.

பசும்பொன் பெருமகனாரின் வழிகாட்டுதலாலும், தேர்தல் பணிகளாலும் இத்தேர்தலில் காமராஜர் விருதுநகர் நகரசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதே தேர்தலில்தான் நீதிக்கட்சி சார்பில் நின்ற இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியை எதிர்த்து தேவர் வெற்றி பெற்றார்.

தேவர் ஒருநாள் மேடையில்  பேசிக் கொண்டிருக்கும்போது  சட்டென்று கண்கள் சிவப்பாக… அனல்தெறிக்கும் கோபத்துடன் பேச ஆரம்பித்தார்… “காமராஜரை நீதிக்கட்சியைச் சார்ந்த யாரோ சிலர் கடத்திக் கொண்டுபோய், எங்கோ மறைவிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவரை யார் கடத்திக்கொண்டு போனது… எங்கே அவரை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பது எல்லாமே எனக்குத் தெரியும். அவரை ஒழுங்கு மரியாதையாக இந்தக் கூட்டம் முடிவதற்குள் இங்கே கொண்டு வந்து மேடையில் என்னிடம் சேர்க்கவேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு…” என்று கர்ஜிக்கும் விதமாக, கோபமாகப் பேசிவிட்டு மீண்டும் கனிவான பேச்சைத் தொடர்ந்தார். அவருக்குப்பின் பலர் பேச…சில மணி நேரம் கூட்டம் நடந்தது. என்ன ஆச்சரியம்! கடைசி பேச்சாளர் பேச்சை முடிக்கும் முன்பாகவே தேவர் சொன்னதுபோல் காமராஜரை மேடையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டு தலைமறைவானார்கள் நீதிக்கட்சியினர். திருப்பரங்குன்றத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜியை எதிர்த்து காமராஜரை நிறுத்தி, அவரை தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக வெற்றிபெறச் செய்தவர் தேவர்.

நேதாஜி & தேவர்

1937 முதல் 1962 வரை நடந்த பொதுத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் அவர் வெற்றிபெற்று, `நான் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவன்’என்பதை உணர்த்தினார். இத்தனைக்கும் போட்டியிட்ட தொகுதிக்குச் செல்லாமலே… `அவர்களின் கஷ்டங்களை,தேவைகளை, உணர்வுகளை உணர்ந்தவன் நான்’ என்பதை நிரூபித்து வெற்றி பெற்றார்.ஒருமுறை அவரைத்தேடி அமைச்சர் வாய்ப்பு வந்தபோதுகூட, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.தேவர் ஆங்கிலத்தில் புலமைவாய்ந்தவர். ஆனாலும், `தமிழ்தான் எனது மூச்சு’ என்பார். `நான் ஆங்கிலம் கற்றது, ஆங்கிலம் தெரிந்தவர் நம்மை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக’ என்று சொல்வார்.

பார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியை நேதாஜி துவக்கியபோது. அது காங்கிரசுக்குள்ளேயே தீவிரவாதிகளைக் கொண்டதொரு சிறிய பிரிவாகத்தான் செயல்பட்டது. அதில் என்.ஜி. ரங்கா, கே.எம்.நாரிமன்,சேனாபதி பாபட், சரத் சந்திரபோஸ் கியோரோடு, மத்திய கமிட்டி உறுப்பினராகச் செயலாற்றியவர்முத்துராமலிங்கத் தேவர். 3.9.1939_அன்று சென்னை கடற்கரையில் நேதாஜி பேசினார்.

அதோடு மட்டுமில்லாமல்… தேவரின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி மதுரைக்கு வரவும் இசைவு தெரிவித்தார். நேதாஜியை அழைத்து மதுரையில் மிகப் பெரிய கூட்டம் நடத்த தேவர் ஏற்பாடு செய்ய… அலைகடலென திரண்டுவிட்ட கூட்டத்தைப் பார்த்து நேதாஜி, `தேவருக்கு இவ்வளவு செல்வாக்கா?’என்று மகிழ்ந்து போனார்.

“தேவரைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அடுத்த பிறவியில் நானும் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்” என்றார்.

ஆனால் அந்தக் கூட்டமே, ஆங்கிலேய அரசு தேவரை நிழலாகக் கண்காணிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது.பிரிட்டனில் நடந்த `இரண்டாம் உலகப் போரை எப்படி எதிர்கொள்வது?’ என்ற விவாதத்தில் கலந்துகொண்டு மதுரை திரும்பிய தேவரை, ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையிலடைத்தது. ஆறு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு தேவர் விடுதலையாகி வெளியே வந்தபோது, நேதாஜி வெளிநாட்டில் இருக்கிறார் என்ற செய்தியை அறிந்தார்.

அரிஜனங்களின் ஆலயப் பிரவேசம்

வடபுலத்திலிருந்து இராமேஸ்வரம் வரும் யாத்திரிகர்கள் இராமேஸ்வரம் தீர்த்தம் ஆடி முடித்த பின் நேராக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் அரண்மனைக்குச் சென்று சேதுபதி மன்னர் களின் காலை, தங்கள் தலையில் எடுத்துவைத்துக் கொள்வார்கள். அப்படிச் செய்தால்தான் இராமேஸ் வரம் தீர்த்தம் ஆடிய முழுப்புண்ணியமும் தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் அது.
ஏனென்றால் இராமேஸ்வரம், சேதுபதி மன்னர் களின் ஆளுகையின் கீழ் இருந்தது. புனிதத் தலமான இராமேஸ்வரத்தையே ஆளுகின்றவர்கள் ஆண்டவ னுக்குச் சமம் என்று எண்ணினார்கள். திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்று அரசர்களை ஆண்டவன் பிரதிநிதியாகப் பார்த்த காலம் அது.

அப்படிப்பட்ட காலத்தில் சேதுபதி மன்னரையே எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றார் தேவர் என்றால் அவருடைய மக்கள் செல்வாக்கு எப்படி இருந்தது என்பதை உணரலாம். இவ்வளவிற்கும் இவரை எதிர்த்து இராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாகப் பணியாற்றியவர் தேவரு டைய தந்தை உக்கிரபாண்டியத் தேவர்தான். 1937 தேர்தலில் தேவர் வெற்றி பெற்ற போது அவருக்கு வயது 29 தான். 1938-ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்ச ராக இருந்த போது அரிஜனங்களுக்குகாக ஆலயப் பிரவேசச் சட்டம் இயற்றப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தலைவைரின் கீழ் அரிஜனங்களின் ஆலயப் பிரவேசம் நடை பெறும் என்றும் அந்த வகையில் ராஜாஜிக்கு வேண்டிய வரான வைத்தியநாத ஐயர் தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய நுழைவு நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தால் ரத்த ஆறு ஓடும் என்று உயர் ஜாதியைச் சேர்ந்த ஆத்திக வாதிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அரசாங்கம் அஞ்சியது

தாழ்த்தப்பட்டவர்கள் மதுரைக்கோயிலில் நுழைய வேண்டுமென்றால் தேவர் துணையில்லாமல் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து கொண்ட காந்தி தேவருக்கு ஒரு கடிதம் எழுதினார். “நீங்கள் நினைத்தால் மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்யவைக்கலாம். அதற்கு உதவவேண்டும்.” என்று காந்தி குறிப்பிட்டிருந்தார். ராஜாஜியும் வேண்டு கோள் விடுத்தார்.

அதன்பின் தேவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். இன்ன தேதியில் இன்ன நேரத்தில் வைத்தியநாத ஐயர் தலைமையில் அரிஜனங்கள் ஊர்வலமாகச் சென்று மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைவார் கள். அந்த ஊர்வலத்தில் நானும் கலந்து கொள்கிறேன். நானும் கலந்து கொள்கிறேன் என்றால் என் முன் னிலையில் அது நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆகவே தடுக்கத் துணிவிருப்பவர்கள் தடுத்துப் பார்க்கலாம் என்று தேவர் அதில் கூறி யிருந்தார். கூறியிருந்தார் என்பதை விட எச்சரித் திருந்தார் என்பதே பொருத்தம்.தேவரே இப்படி அறிக்கை வெளியிட்ட பிறகு அவரை எதிர்க்க யார் முன் வருவார்கள். குறிப்பிட்ட தேதியில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தது. தேவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ராஜாஜியின் சட்டம் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருந்திருக்கும்.

கைரேகை சட்டம்

கைரேகைசட்டம்
தேவர்கள் அந்நிய பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தன. எனவே பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் அவர்களை ஒடுக்க முடிவு செய்தது. பிரான்சில் பிரெஞ்சுபரட்சி நடந்த போது பழங்குடியினரின் பங்களிப்பு அதில் அதிகமிருந்தது. எனவே அவர்களை ஒடுக்க முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைப்போலவே இந்தியப் பழங்குடி இனத்தவரை ஒடுக்க குற்றப் பழங்குடிகள் சட்டத்தைக் கொண்டுவந்து கொடுமை படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டம் (1911) பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் எதிரொலித்தது. நான்கு முறை இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தை கையகப்படுத்த இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பஞ்சாப், மும்பை, கல்கத்தா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது. கள்ளர் மறவர் அகமுடையவர் என 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். பிறமலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் அதிகமாக கொடுமைபடுத்தப்பட்டனர். இதில் 15,000 பேர் கண்காணிக்கப்பட்டு 33 பேர் குற்றவாளிகளாக தண்டனை பெற்றனர் .
1920 மார்ச் 20இல் பெருங்காமநல்லூர் கள்ளர் இன பெரியவர்கள் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தை தங்கள் மீது நடைமுறைபடுத்தக்கூடாது என முறையிட்டனர். ஆனால், போல்சோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்க தூண்டி விட்டது. பிறமலை கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும். போலீசுக்கு பிடிக்காதவர்களும் இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1920 மார்ச் கடைசியில் ரேகை போலீஸ் உத்தரவிட்டது.

1920 ஏப்ரல் 3இல் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெருங்காமநல்லூர் கலவரம் செய்தனர். இதை அறிந்த இங்கிலாந்து அரசு மக்களை கொடுமையாக ஒடுக்க முடிவு செய்தது. கிளர்ச்சி செய்த மக்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர். .

‘கட்டைவிரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப் போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே!’ என முத்துராமலிங்கத் தேவர் போராட்டம் செய்தார்.

போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.

தேவர் திருமகனார் தொழிளாலர்களுக்கா மிகவும் பாடுபட்டார் மதுரை நீட்டிங் தொழிளாலர்கள் பசுமலை மகாலெட்சுமி தொழிலாளர்கள் மதுரை பஞ்சாலைத்தொழிலாளர்கள் ஆகியவற்றிற்கு மிகவும் பாடுபட்டு வந்தார் அத்தொழிலாளர்களின் சங்கத்தலைவராகவும் இருந்து வந்தார் முதலாளி தத்துவத்தை எதிர்த்தார்.

1938-இல் ஏழை எளிய தொழிளார்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டார் எனவே அவரை அரசாங்கம் கைது செய்து நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. இதுவே இவர் சிறை சென்ற முதல்தடவையாகும். மக்கள் வெள்ளமாக கொதித்தெழுந்துள்ளார்கள் நாடே கொந்தளிப்பானது எனவே அவரை பத்தே நாட்களில் விடுவித்தனர்.

1939 இல் நேதாஜி அழைத்து ஒரு மாபெரும் மாநாடு ஒன்றை மதுரையில் கூட்டினார். இதற்கிடையில் 1938 ஆம் ஆண்டு அவர் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் காலமானார்
தடுப்பு காவல்சட்டத்தை மீறியதற்காக திருச்சி சிறையில் ஒன்றரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆங்கில அரசு ” பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மீண்டும் சிறையிலிட்டது. தொடர்ந்து சிறைவாசம் காலம் கழித்ததேவர் திருமகன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்தார்.

தேவர் திருமகனார் எப்போதும் விவேகானந்தரை ஆண்மீகக் குருவாகவும் நேதாஜியின் அரசியல் கொள்கையையும் கடைபிடித்து வந்தார்.

1946 இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் கட்சியில் பயன்படுத்தப்பட்ட அகிம்சை வழி உள்ளிட்ட பல கொள்கைகள் பிடிக்காமல் காங்கிரஸிலிருந்து பிரிந்து “பார்வர்டு பிளாக்” கட்சியில் சேர்ந்தார்.

1957 இல் மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்படுத்தினார் அதில் அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அமைதியை இழந்து அரசாங்கத்தில் இறங்கினால் அது என் இதயத்தை பிளந்து ரத்தத்தை குடிப்பது போன்றதாகும் என்று எல்லோரும் அமைதி காத்திட வேண்டும் என்று இவ்வாறு கூறினார்

தேவரும் சமீன் ஒழிப்பும்

தேவரும் சமீன் ஒழிப்பும்
சமயத்திற்கும், பிற்பட்ட சமுதாய மேம்பாட்டிற்கும் பெருந்தொண்டாற்றி வந்த திரு. தேவர் அவர்கள், தானாண்மை மிளிர்ந்த வேளாண்மைக் குடியினர்கள் மேம்பாட்டுக்கும் உழைக்க உறுதி கொண்டார்.

திருச்சுழி – பாக்குவெட்டி – தவசிக்குறிச்சி – செய்யாமங்கலம் – கீழராமந்தி – கறிக்கோட்டம் – நகரத்தார் குறிச்சி – மேலராமந்தி – சேம்பக்குளம் முதலிய 32 கிராமங்களில் ஆயிரக்கணக்கான நன்செய், புன்செய் நிலங்களுக்குரிய ஒரு மாபெரும் பட்டாதாரி பெரும் நிழக்கிழார், இராமநாதபுரம் சமீனுக்குட்பட்டவர் பசும்பொன் தேவர் அவர்கள் (ஏர்உழவர்களாகியமறவர் மக்கள் 50, 100, 1000, வேலி நன்செய், புன்செய் நிலங்களுக்குரிய பட்டாதாரியாக இருந்தவர். 63.7 விழுக்காடு விவசாயிகளாக இருந்தனவர் 1951 ம் ஆண்டுஇந்திய மக்கள் கணக்கெடுப்பு. இராநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி குறிப்பு)

தமக்கு உரித்தாக இருந்த பெரும்பாலான நிலங்களை எல்லாம் ஏழை, எளிய அரிசனங்களுக்கு இலவசமாகவே கொடுத்தவர், சனநாயக சமத்துவ கொள்கையை முதன் முதலாக அமுல்படுத்திய அடலேறு தேவர் அவர்கள்.

சமீன்தார்களின் ஆட்சியுரிமைக்குட்பட்டிருந்த வேளாண்மைப் பெரு மக்களின் அவல நிலையைப் போக்கவும். அவர்கது துயர் துடைக்கவும் உறுதி கொண்டெழுந்தார். வெள்ளையர் தந்த வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கும் வளையாத நெஞ்சுடைய வண்டமிழர் தளபதி அல்லவா அவர்!

“தமிழ்நாடு சமீன் ஒழிப்புச் சங்கம்” நிறுவினார், விவசாய பெருங்குடி மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி உண்டாயிற்று. நாடெங்கும் சென்று தேவர் அவர்கள் தமது கொள்கையை எடுத்துரைத்தார், வீரமும், விவேகமும் சுரந்து நிற்கும் தேவர் அவர்களது துடிப்புரைகள், துணிச்சலான பேச்சு, எவரும் எதிர்க்க முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த செயலாகியது. ஆதரவு பெருகியது மக்களிடம். உழைக்கும் கைகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒலிக்கத் தொடங்கியது. “சமீன் ஒழிக” என்ற கிளர்ச்சி எழுந்தது. காங்கிரசு தேர்தல்வக்குறுதியிலும் வெற்றி பெற்றால் சமீன்ஒழிப்புச் சட்டம் செய்யப்படும் என்ற வாக்குறுதியும் கொடுத்திருந்தது. திரு. பிரகாசம் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சமீன்தார்கள் சார்பாக மிர்சாபூர் சமீன்தார் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். இறுதியில் சமீன் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்ப்டது.
தமது செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் குறுநில மன்னராக இருக்க வேண்டிய செருக்கு இல்லாத தேவர் அவர்கள் தமிழ்க் குலத்திற்கே ஒரு விலை மதிப்பீடல்லா மாணிக்கமாகும்.

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாள் சட்டம் நிறைவேறியது. வேளாண்மைப் பெருங்குடி மக்கள் வாழ்வு மலர்ந்தது.

தேசியம், தெய்வீகம்

இந்தியா சுதந்திரமடைந்தபிறகு தேசியம், தெய்வீகம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதி,நேர்மையான அரசியல் தலைவராக வாழ்ந்தார்.

“சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது மிகப்பெரிய அநியாயம். கடவுள் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர, சாதியையும் நிறத்தையும் அல்ல… சாதியும், நிறமும் அரசியலுக்கும்கிடையாது… ஆன்மிகத்திற்கும் கிடையாது…”

என்பது முத்துராமலிங்கத் தேவரின் தாரக மந்திரம்.

முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வியல், ஒவ்வொரு அரசியல் அபிமானிகளுக்கும் ஓர் அரிச்சுவடி…அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர், பசுபொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட

தேவர் அவரது அந்தஸ்து மறைக்கப்பட்டது…….

ஆனால் காலப் போக்கில் அவரது அந்தஸ்து மறைக்கப்பட்டது…….
அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது, அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின்மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது. தேவர்தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது! இம்மானுவேல் ஹிந்து தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர். பிற்காலத்தில் மீனாட்சிபுரம் ஹிந்து தலித்துகள் முகமதியராக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டதற்கு அது ஒரு முன்னுதாரணம்.
இதன் பின் விளைவாகத்தான் தென் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற உயர் தகுதியில் இருந்த பசும்பொன் தேவர் காமராஜர் ஆட்சியால் ஒரு கொலை வழக்குக் குற்றவாளியாகச் சிறைவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ! தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான ஜாதிக் கலவரமாக அது தடம் புரண்டு வருந்தத் தக்க விளைவுகளை உண்டாக்கிவிட்டது. இந்த அடிப்படை உண்மையை காமராஜர் அரசு சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. பசும்பொன் தேவர் தேவர்மாரின் ஜாதித் தலைவராகக் குறுக்கப்பட்டார்.
இவ்வளவுக்கும் காமராஜருக்கு முதல் முதலில் விருதுப்பட்டி என்கிற பிற்கால விருதுநகரின் நகராட்சித் தேர்த்தலில் நிற்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவரே பசும்பொன் தேவர்தான்! ஒரு ஆட்டை வாங்கி காமராஜர் பெயரில் அதற்காக நகராட்சிக்கு வரி செலுத்தி அப்படியொரு தகுதியை காமராஜர் பெறச் செய்தார், பசும்பொன் தேவர். பிற்காலத்தில் காமராஜர் மாநில முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் பசுபொன் தேவர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்ச்சியை மிகவும் அலட்சியமான தொனியில் பகிரங்கப் படுத்தியதைக் காமராஜரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிலுக்குப் பசும்ப்பொன் தேவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்; இம்மானுவேல் கொலைப்பட்டது அவருக்கு வசதியாகப் போயிற்று!

பசும் பொன் தேவர் காலமானார்

பசும் பொன் தேவர் காலமானார்
ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் . 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு பசும் பொன்தேவர் காலமானார். தேவர்மாரின் கடைசி விருப்பம் “என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்” என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக் வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதையா ஏழை இனந்தான்
போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே….
வெட்டறுவா தாங்கி…….. வீசுகிற ஊரில்
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே…
நல்லவழி நீதான் சொல்லி என்ன லாபம் சொன்னவன் தானே சூழ்ந்ததின்று பாவம்
போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தே…முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான்

எங்க உள்ளத்தந்தை.. தேவர் குல சிங்கம் எழில் முத்து ராமலிங்கம்.
எழில் முத்து ராமலிங்கம்.
முருகா முருகா என்ற தாங்கள் முக்குலத்தின் மாபெரும் திங்கள்
முருகா முருகா என்ற தாங்கள் முக்குலத்தின் மாபெரும் திங்கள்
குன்றினடியிலேயே இருந்தாய் குமரனையே நினைத்திருந்தாய்
குன்றினடியிலேயே இருந்தாய் குமரனையே நினைத்திருந்தாய்
பசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய் பசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய்


பசும்பொன் தங்கமய்யா……. பசும்பொன் தங்கமய்யா..

One Response to “காங்கிரசை காத்தான்”

  1. maya says:

    வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி ஓ….
    தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
    பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
    தங்கத்துக் வேறு மாற்று உண்டா கூறு

Leave a Reply

Security Code: