ஆன்மீக ஞானி, தேசியத் தலைவர், பொதுவுடைமைத் தலைவர், வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது.
ஒரு தொன்மம் அல்லது ஆசாரம் அல்லது திருவிழா எப்படி உருவாகி வலுப்பெறுகிறது என்பதற்கான சமீபகால உதாரணம் பசும்பொன் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 அன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா……..
உண்மையை யார் உரக்கச் சொன்னாலும் அவரை மதிக்க வேண்டியது நமது கடமை. இனம், குலம், மொழி எதுவும் இதற்குத் தடை கிடையாது. இதோ திரு. வைகோ அவர்களின் மதுரை தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பு உரை . தேவர் புகழ் வாழ்க வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில், தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில், ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என உரைக்க ஒரு புலவனால் இயலும்; திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளையும் எதிர்க்க இயலும் என்ற நக்கீரன் பெருமை [...]
தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர் பாவாணர். தனித்தமிழ் வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் . இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும். தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.
உள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம். “அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை. “காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட [...]
‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூல் எழுதியுள்ளார் ம.போ.சி. அவர்கள. அதில் சின்ன மறவர் நாட்டின் செங்கதிராகத் திகழ்ந்த மான மறத்தமிழ் மாமன்னர் மருதுபாண்டியர்களையும் குறை கூறாமல் விட்டு விடவில்லை. வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம். ம.போ.சி கூறியதாவது: “முத்துவடுகநாதர் ஒரு போரில் வீரமரணம் அடைந்தார். களத்திலே அவருடைய வீர மனைவி வேலுநாச்சியாரும், தளபதிகளான மருதுபாண்டியர்களும் இருந்தும் அவரைக் காப்பாற்ற தவறிவிட்டனர்” இவ்வாறு [...]