பாவாணர் யார்?
தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர் பாவாணர். தனித்தமிழ் வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் . இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும்.
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.
“வித்துவான் தேவநேயப் பாவாணர் ஏன்.ஓ.எல். மொழித்துறை வாசகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்”
இவர் பழந்தமிழ் அரிசன மரபினர். திருநெல்வேலி சீமையில் கிருத்தவ சமயம் புக்கவர். வடசொற்கள், தமிழ்ச் சொற்கள் ஆராய்ச்சியால் மாற்றிய அறிஞர்….! அடிகள் பால் அளவிறந்த அன்பும், மதிப்பும் பூண்டவர்” என்று இருக்கிறார்.
சொல்லுகிறார் பாவாணர்:
“என்னையும் கேளாது மடைத் திருநாவுக்கரசு என்னை அரிசன் என்று எழுதி இருக்கிறது, நான் புத்தகத்தைப் பாராததினால் இதுவரை தெரியவில்லை. திருநாவுக்கரசு மடைத்தனமாக எழுதினாலும், தாங்கள் எப்படி வெளியிடலாம்? நான் என்றேனும் எங்கேனும் என்னை அரிசன் என்று சொன்னது அல்லது எழுதியதுண்டா? – பாவாணர் கடிதங்கள் – சைவ சித்தாந்த நூற்பதிப்பு – ஒரு பகுதி (தொகுப்பு – இலக்கியச் செல்வர் இரா.இளங்குமரன்)
பாவாணர் மறுப்புரை:
சங்கரன் கோயில் எனக்கு உறவினர் ஒருவரும் இல்லை. என அன்னையர் வழியை நோக்கி அங்குள்ள பள்ளக்குடிப் பிறந்த என உறவினர் அல்லாத நெடுஞ்செழியன் என்னும் சிறுவன் அல்லது இளைஞன் என தந்தை வழியை அறியாமல் பெருமைக்காக என்னை தன இனமென்று திருநாவுக்கரசிடம் சொல்லி இருக்கிறான். அதை நம்பி….!
தமிழன் என்று தலை நிமிர்ந்து மார்தட்டும் வீரரும் மிடுக்கும் எனக்கு இருக்குமளவு சோ.சு.பாரதியாருக்குக் கூட இருந்தது இல்லையே. அங்ஙனம் இருப்பவும் என்னை அரிசன் என்று எங்ஙனம் குறிப்பிடலாம்? இன்றிருக்கும் தமிழரெல்லேருள்ளும் உயர்ந்தவனாகக் என்னைக் கருதிகிறேன். தாழ்த்தப்பட்டவன் என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பதே தவறு. அதிலும் வடவர் ஒருவர் (காந்தி) புணர்ந்த அரிசன் (ஹரிஜன்). மலல்மகன் என்னும் வரசொல்லாற் குறிப்பது. தந்தையார் வரலாற்றைத் தவிர வேறெதையும் எழுதத் தெரியாத மடைத் திருநாவுக்கரசை உடனி அழைத்து இம்முடங்கலைக் காட்டுக. மறைமலை அடிகளார் வரலாற்றிலும் என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிக. … … … … மடைத் திருநாவுக்கரசால் எனக்கொரு புகழும் வேண்டியதில்லை. என் தொண்டை இரண்டொரு ஆண்டில் உலகறியும். என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிய இயலாவிடில் அரிசன் என்று குறிப்பிட்டுள்ள தொடர் முழுவதையும் காரச்சு மையலால் மறைத்துவிடுக.
என் தந்தையார் 1906ம் ஆண்டிலும், என அன்னையார் அதன் பின்பும் இறந்து போயினர். என தந்தையார் உயிரோடிருந்த போதே தம் தெய்வப் பற்றில் தந்தையார் குலத்தை மறந்துவிட்டதானாலும், அவர் இறந்து அரை நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்டதினாலும், அவர் முன்னோரைப் பற்றி இன்று பலருக்குத் தெரியாது.
எனவே, ஒருவர் வாழ்நாளிலேயே அவர்தம் மரபு பெருமைகளை அழிக்கப்பட்டு வரும் போது, மறைந்த தமது முன்னோர்கள் வரலாறு முழுமையாக மாற்றப்பட்டு வருகிறது என்றால்…….. வியப்புடையத்தன்று.
மான மறக்குல மக்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு உரிமைப் போராட்டத்துக்காக அருஞ்செயலாற்றி, உயிர் நீத்த தியாக வீரர்கள் வரலாற்றையும், அவர்கள் முழங்கிய தாரக மந்திர மொழிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வைர மணிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது தெளிவான விளக்கங்களுடன். நீண்ட நாட்களாக எமது நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருந்த பணி ஒருவாறு நிறைவேறியது.
என்றாலும் கூட இன்னும் ஏராளமான வரலாறுகள், பழம் பாடல்கள் கும்மிகள் இருந்தும் பலருக்கும் தெரிந்தும் ஏனோ எடுத்துக்காட்ட முன்வரவில்லை. எனவே தான் உமையான வரலாறுகள், நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டு வருகின்றது. விரைவில் புகழ் தேடிக் கொள்ள வேண்டும் என்று வரலாற்று பெருமைகளை சிதைத்துவிட துணிவு கொண்டுள்ளது துரோகச் செயல்.
மாவீரர்களேல்லாம் நினைவோ, நினைவு மண்டபன்களோ இல்லை. எழுப்பவும் எவரும் முன் வரவும் இல்லை. என்றாலும் கூட காற்றும் மண்ணும் அவர்கள் வாழ்ந்த நிலத்தையே நினைவுச் சின்னமாக நம் மனக்கண் முன்னாள் காட்சியளிக்கின்றன. பேசுகின்றன. இனியாகினும் வீரர்கள் வாழ்வை எண்ணித் தலைவணங்கி அஞ்சலி செய்ய ஆணை செய்வோமாக. தவறினால் ஈவிரக்கமற்று தண்டித்து விடும் எதிர்காலம்.