Archive for July, 2010

கப்பலோட்டிய தமிழன் யார்?

July 20 2010one Commented

Categorized Under: பசும்பொன் தேவர்

கப்பலோட்டிய தமிழன் யார்? நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு. “தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு [...]

மறவர் போற்றும் வீரப்போர்

July 18 2010No Commented

Categorized Under: பாண்டிய வம்சம்

தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

தஞ்சை பெரிய கோவில்

July 18 2010No Commented

Categorized Under: சோழ வம்சம், வரலாறு

தஞ்சை பெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில் மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ தெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி ஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில் மிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும், ராஜராஜனை பற்றியும் தான் . தஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம் என்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில் பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது [...]

செப்பேடுகள் – கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்)

July 9 2010one Commented

Categorized Under: சோழ வம்சம்

20-5-2010 அன்று தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. கழுக்காணி முட்டத்தில்- பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட – கைலாசநாதர் கோயில் உள்ளது. தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது-பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், [...]

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

July 3 2010No Commented

Categorized Under: பாண்டிய வம்சம், வரலாறு

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள் மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள். எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கலித்தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் [...]

மருது பாண்டியர்கள் – வரலாறு

July 3 2010No Commented

Categorized Under: மருது பாண்டியர்கள், வரலாறு

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார்.