Archive for the 'பசும்பொன் தேவர்' Category

மாவீரன் பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன் முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!! சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன. மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் [...]

கப்பலோட்டிய தமிழன் யார்?

July 20 2010one Commented

Categorized Under: பசும்பொன் தேவர்

கப்பலோட்டிய தமிழன் யார்? நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு. “தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு [...]

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஆன்மீக ஞானி, தேசியத் தலைவர், பொதுவுடைமைத் தலைவர், வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது.

மருதுபாண்டியர் ஆக்கிரமித்துக் கொண்டனரா?

‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூல் எழுதியுள்ளார் ம.போ.சி. அவர்கள. அதில் சின்ன மறவர் நாட்டின் செங்கதிராகத் திகழ்ந்த மான மறத்தமிழ் மாமன்னர் மருதுபாண்டியர்களையும் குறை கூறாமல் விட்டு விடவில்லை. வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம். ம.போ.சி கூறியதாவது: “முத்துவடுகநாதர் ஒரு போரில் வீரமரணம் அடைந்தார். களத்திலே அவருடைய வீர மனைவி வேலுநாச்சியாரும், தளபதிகளான மருதுபாண்டியர்களும் இருந்தும் அவரைக் காப்பாற்ற தவறிவிட்டனர்” இவ்வாறு [...]

தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில்….

May 14 2010No Commented

Categorized Under: பசும்பொன் தேவர்

தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில் 1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ்  தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார். ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி [...]

பசும்பொன் தேவரின் பன்முகத் தோற்றம்

May 3 2010No Commented

Categorized Under: பசும்பொன் தேவர், வரலாறு

பசும்பொன் தேவரின் பன்முகத் தோற்றம் ” ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு. “பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . . .கூடாது. . . .! பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க [...]