Archive for the 'மருது பாண்டியர்கள்' Category

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

September 7 2010No Commented

Categorized Under: மருது பாண்டியர்கள்

-பி.ஏ. கிருஷ்ணன் “நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர். என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ” இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் [...]

மருது பாண்டியர்கள் – வரலாறு

July 3 2010No Commented

Categorized Under: மருது பாண்டியர்கள், வரலாறு

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார்.

மருதுபாண்டியர் ஆக்கிரமித்துக் கொண்டனரா?

‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூல் எழுதியுள்ளார் ம.போ.சி. அவர்கள. அதில் சின்ன மறவர் நாட்டின் செங்கதிராகத் திகழ்ந்த மான மறத்தமிழ் மாமன்னர் மருதுபாண்டியர்களையும் குறை கூறாமல் விட்டு விடவில்லை. வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம். ம.போ.சி கூறியதாவது: “முத்துவடுகநாதர் ஒரு போரில் வீரமரணம் அடைந்தார். களத்திலே அவருடைய வீர மனைவி வேலுநாச்சியாரும், தளபதிகளான மருதுபாண்டியர்களும் இருந்தும் அவரைக் காப்பாற்ற தவறிவிட்டனர்” இவ்வாறு [...]

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம். மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய [...]

மருது பாண்டியர்கள்

March 11 2010No Commented

Categorized Under: மருது பாண்டியர்கள், வரலாறு

சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவன  வற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர்மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், [...]