Archive for the 'சோழ வம்சம்' Category

கள்ளர் சரித்திரம் – ஒரு அறிமுகம்

August 8 2010No Commented

Categorized Under: சோழ வம்சம், வரலாறு

””””கள்ளர்”””” என்ற சொல் பொதுவாக ””””களவுத்தொழில் புரிபவர்”””” என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை ””””எனி இந்தியன் பதிப்பகம்”””” வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள ””””கள்ளர் சரித்திரம்”””” என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் ””””கார்காத்த வேளாளர்கள்”””” காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, “கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்”””””””” என்பதைச் சொல்லிக் [...]

கள்ளர் சரித்திரம் – 7

August 8 2010No Commented

Categorized Under: சோழ வம்சம்

கள்ளர் சரித்திரம் ஆறாம் அதிகாரம் நன்மக்கள், தற்கால நிமை, சீர்திருத்தம் கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும், இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும் , வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர்கள் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர்.

கள்ளர் சரித்திரம் – 6

August 8 2010No Commented

Categorized Under: சோழ வம்சம்

கள்ளர் சரித்திரம் ஐந்தாம் அதிகாரம் நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல் தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுதும். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், [...]

கள்ளர் சரித்திரம் – 5

August 8 2010No Commented

Categorized Under: சோழ வம்சம்

கள்ளர் சரித்திரம் நான்காம் அதிகாரம் புதுக்கோட்டை மன்னர்கள் தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் [...]

கள்ளர் சரித்திரம் – 4

August 8 2010No Commented

Categorized Under: சோழ வம்சம்

கள்ளர் சரித்திரம் மூன்றாம் அதிகாரம் அரையர்களின் முற்கால நிலைமை கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் இவர்களின் அப்பொழுதைய நிலைமையை இங்கு வேறாக எடுத்துக் கூறவேண்டுவதின்று. இன்னவரின் ஆட்சி நிலை குலையத் தலைப்பட்டதன் பின்பு இருந்துவந்த [...]

கள்ளர் சரித்திரம் – 3

August 8 2010No Commented

Categorized Under: சோழ வம்சம்

இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது. எனினும் சோழர்குடி முதலியவும் பிற்காலத்தில் இம்மரபிலே கலந்து விட்டன எனத் தெரிகிறது. இங்கே சோழரது கலப்பைக் குறித்துச் சிறிது காட்டுதும். சோழர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர்? அவரது ஆட்சி நிலை குலைந்து விட்டதேயன்றி அவர் தாமும் கிளையுடன் அறவெயொழிந்து விட்டனராவரா? எந்த குலமும் அஃது எவ்வளவு சீர்கேடான நிலையை அடைந் திருப்பினும் அறவேயொழிந்துவிடு [...]